Saturday, 24 December 2016

நீயடா

என் சுவாசத்துக்கு காற்று - நீ.
என் உடலுக்கு உயிர் - நீ.
என் இதயத்தின் துடிப்பு - நீ.
என் ஜீவ நாடியின் ஜீவன்  - நீ
என் உள்ளத்தில் உறை பனியாக - நீ 

நீயோ இடிபோல் பிடியாது என்கிறாய்.
நீயோ இப்போது இதயத்தை இருட்டாக்கிறாய்.
நீயோ விழி இரண்டையும் உப்பு நீரில் நீராட விடுகிறாய்.
நீயோ தண்ணீர் இல்லாத போதும் கண்ணீர் வற்றாத
வாறு துன்பம் கொடுக்கிறாய்.

   

பருவம்

நல்லவை கெட்டவைகளை உணராப் பருவம்.
நல்லவர் கெட்டவர் இனம் பிரிக்காப் பருவம்.
நல்லவை சொல்வோரை ஏற்றுக்காத பருவம்.
நம்மில் உண்டு அவை இளமைப் பருவம்.
நல்ல எண்ணம் உடையோரை கேலி பண்ணும் பருவம்.
நன்மையோடு தீயதையும் செய்யத் துணியும் பருவம். நடாக்காதவைகளையும் நடத்தவே துடிக்கும் பருவம்.
நம்மை நாமே புகழும் பருவம்.
நம்மில் உண்டு அது விடலைப் பருவம்.
நடித்துக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம்.
நயவஞ்சகத் தனமான மந்திரம்.
நக்கல் கேலி கிண்டலை விரும்பும் உள்ளம்.
நம்மில் உண்டு அது துன்பம் அறியாப் பருவம்.

    

தந்தையானேன்

சிற்றிடையாள் 
எனைச் சேர்ந்தாள்
நான் சிந்திய முத்தத்தை
சேர்த்தெடுத்தாள்  .

கரம் கொடுத்தேன்
இடம் கொடுத்தாள் 
உடல் மாற்றம்
கொண்டாள்  .

இடை அது பெருக்கக்
கண்டேன் நடை அது
தழரக் கண்டேன் .

சிப்பியின் முத்தாக
என் பிள்ளைச் செல்வமது
உரு எடுக்க க்கண்டேன்  .

பெறுமென இருந்த
என் பெயருக்கு ஒரு
புனைபெயர் வரக்கண்டு
நான் மகிழ்ந்து நின்றேன் .

     

என் இதய வாணியே

என்  காதல் அது காதலடி
காமத்தையும் நான்
அணைத்துக் கொண்டேன்
ஒரு ஓரமடி..........\

காலம்  காலமாய்
காதலிப்பேன்
உன்னையடி
உறவென்று
உயிராக
நினைப்பதும்
உன்னைத்தானடி......\

உன் மேல் வந்த காதலடி
உள்ளே இருந்து வந்த
காதலடி.....\

நீல வானமும் நிறம்
மாறுவது இல்லை
நீந்தும் நிலவும்
அதை வெறுப்பதில்லை.....\

இடம் மாறாத விழி
இண்டும் தடம் மாறி
நோக்குவதும் ஏனடி...\

மின்சாரம் இல்லாமல்
ஒளி கொடுக்கின்றது
நட்சத்திரம்.....\

நீ என் சம்சாரம் ஆகும்
முன்பே உன் மடி மீது
இடம் தேடுகின்றது என்
அடங்கா இச்சைத்னதமடி...\

மடி கொடு மடி கொடு நீ
நான் மடியும் வரை இடம்
கொடு நீ.......\

தனக்கு  மட்டும்
தனக்கு மட்டும் என்று
நினைத்து ஓடி ஓடி
தேன் எடுத்து தாணம்
கொடுக்கும் தேனீ......\

நான் உனக்கு மட்டும்
உனக்கு மட்டும் என்று
தானாக வாயேன் நீயடி.....\

தனியாக தவிக்கின்றேன்
வாணி வருத்துகின்றாயே
வாலியின் கவி வரிகள்
போல் என்னை நீ.......\

ஓடும் குருதி ஓயாமல்
இதயத்தில் நுழைகின்றதே
உன் மேல் உள்ள காதலும்
அதனுடன் விளையாடியே
என்னை உசுப்பேற்றுகின்றதே...\

கை சேரும் வரை
காதலிப்பேன் கை
சேர்ந்த பின்னே
ஆதரிப்பேன்.....\

சாகும் வரை சேர்ந்து
இருப்பேன் வாழ்க்கை
ஒன்று நான் கொடுப்பேன்.....\

வாடாமல்லிகை போல்
உனைக் காப்பேன்
வந்து விடு என் இதய
வாணியே.........\

  

நாம் மனிதர்களே

கடன் கார வாழ்க்கையை மாற்ற வேண்டும்.
கடமையில் உயரவேண்டும் .

கேள்விகளுக்கு விடை அளிக்கவேண்டும்
கேள்விகளைத் தொடுக்க வேண்டும்.

அன்பால் அணைக்க வேண்டும்
அன்னை  நாட்டிலும் தலை குணியாது வாழவேண்டும்.

ஆற்றாமைகளை அழிக்க வேண்டும்.
ஆற்றலைப் பெருக்க வேண்டும்.

பொறுமை காக்க வேண்டும்
பொது உடமைகளைப் பாது காக்க வேண்டும்.

இன்னல்களை ஏற்றுக்க  வேண்டும்
இன்பத்திலும் நுழைய வேண்டும்.

தாழ்த்தப்படுவதில் இருந்து மாறவேண்டும்.
தாழ்வு மனப்பாங்கை கைவிடவேண்டும்.

அழுவதற்காகவும் விழுவதற்காகவும்
மண்ணில் மனிதனாகப்  பிறக்கவில்லை .

ஆழ்வதற்காகவும் வாழ்வதற்காகவும்
மண்ணில் மனிதனாக நாம்  உருவெடுத்தோம்.

                

மயங்கிப்புட்டான்

துடப்பம் கட்டத் தாடிக்காரன்.
எடுப்பான மீசைக்காரன்.
துடிப்பான இளமைக் காரன்.
கண்டிப்பான வார்த்தைக் காரன்.
வேசம் போடாத வேட்டைக்காரன்.
நாட்டை எண்ணி ஏங்கும் நல்ல மனசுக்காரன் .
என்னை மயக்கிப்புட்டான். அந்த தந்திரக் காரன்.

          

உறவு

பொல்லாத உறவை
தள்ளி விடவே எண்ணினேன்
உன் நினைவுகளோ
பிடி தழராத வாறு இறுக்கியது

நித்தம்  நான் ரசித்த முகம்
என்னை வெறுத்தாலும்
என்னுள்ளே அலை அலையாகவே
புரளுகிறது தொட்ட குறை விட்ட குறையாக

நீ நழுவினாலும் கண்ணில் தென்படும்
சில கவி வரிகளோ புதைக்க நினைத்த
உறவைத் தட்டி எழுப்புகிறது மணி போல.
பிரிந்தாலும் புதைந்தாலும் மறக்க முடியாது
எனச்  சொல்லி நகைக்கிறது ஆழ் மனம் உன்னை .

செத்துப் போக வேண்டிய நாள் முன்பே
நான் அறிந்தால் நிச்சயம் உயிர் திறக்கும் முன்
எப்போதும் போல் செய்தி விடுவேன்
இறுதியான செய்தி என்று கூறாமலே
நீயும் எப்போதும் போல் அலட்சியம் 
செய்வதும் என்னவோ உறுதியானவை தான்.