Saturday, 30 April 2016

தொளிலாளர் தின நல் வாழ்த்துக்கள்

தொழிலாளர் கை ஓங்க. வேண்டும்
முதலாளி  கை நீள வேண்டும் .

வறுமை ஒழிய வேண்டும்
வரவு சிறக்க வேண்டும்
அன்பு நிலைக்க வேண்டும் .

ஆரோக்கியமான வருமானம் பெருக வேண்டும்
குழந்தை தொழிலாளியின் கொடுமை மறைய
வேண்டும் .

ஒற்றுமையே பலம் என குரல் ஒலிக்கவேண்டும்
பணக்காரன் ஏழை முதலாளி தொழிலாளி .
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் எண்ணம்
மறையவேண்டும் நாடும் வீடும் மக்களும்
என்றும் நலமாக மகிழ்வாக  வாழ வேண்டும் .

அன்பு உறவுகள் அனைவருக்கும்
எனது தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் .

குறிப்பாக. ...ஏழைத் தொழிலாளிக்கு என்
உள்ளம் நிறைந்த. வாழ்த்துக்கள்

 

வலைப்பூ

நீ யாரோ நான் யார அறியேன் ஆனால்
வளைத்துப் போட்டது வலைப் பூக்கள்
அறி முகம் மட்டும் வைத்துக் கொண்டு
வலைக்குள் மாட்டியது நமது அன்பு .

நூல் கொண்டு பின்னாத வலைப் பூக்கள்
தடைகள் பல வந்தாலும் கணினியைத்
தட்டித் தட்டிப் பேச வைக்கும் வலைப் பூக்கள்
வாசணை இல்லாது போனாலும் பாசமாக
உலகையே தன் வசம் எடுத்த பூக்கள்   .

ஆண்கள்  பெண்கள் வேற்றுமை இன்றி
தன் நினைவில் சூடிக் கொள்ளும் பூக்கள்
சிரமமும் கொடுக்கும் சிரிப்பும் கொடுக்கும் .

வீட்டில் திட்டும் வாங்கிக் கொடுக்கும்
புது தென்பும் கொடுக்கும் கனியாத
கணினிக்குள் கலையாத வலையாக 
வலைப்பூக்கள்  .

கவிஞர்களின் கவிதைகளையும்
கலைஞர்களின் கதைகளையும்
கில்லாடிகளின் கிலு கிலுப்புக்களையும்
அருளானந்தத் தாண்டவங்களையும்
ஆங்கில நடனங்களையும்
பல கிசு கிசு செய்திகளையும் .

இவைகளை விரித்த வலையில்
சிக்க வைத்து காட்டிக் கொடுக்கும்
வலைப்பூக்கள் மாற்றங்கள் பல
வந்தாலும் மாறாமல் வளர
வேண்டும் வலைப் பூக்கள்.

  
   

Friday, 29 April 2016

வந்து நில் அன்பே

ராஜா எங்கிறான்
ராஜாங்கம் கொடுப்பேன் எங்கிறான்.
ராத்திரிப் பொழுதுக்கு
ராகம் பாட வா என அழைக்கிறான்.

மந்திரி எங்கிறான்
தந்திரி இல்லை எங்கிறான்.
மாந்திரிகம் செய்யப் போவதில்லை.
அமர்ந்திரி வந்து என்னோடு எங்கிறான்.

எவன் எவனோ எதை எதையோ சொல்லி
எனை அழைக்கிறான்.
எதுகும் சொல்லாது உன் மௌன மொழியே
என்னை மயக்குதடா.

கண்டுக்காது  நீ விட்டு விட்டு ஒதுங்குவது
கண்டு கலங்குகின்றது கண்ணுமடா.

உறவும் இல்லை பிரிவும் இல்லை
உனக்காக என் மனம் புலம்புகிறது நின்று.

பனிக்காற்றும் வந்து கொல்லாது
பனிப்போர் செய்து குளிர்த் தொல்லை கொடுக்குது.

நெருப்பாக நீ எரித்தாலும் உனை
நெருங்கவே நெஞ்சம் ஏங்குது.

தாங்காது இந்த பூவை மனம்
புரியாதது போல் பிரியாதே  அன்பே என்
பிரியத்தைப் புரிந்து வந்து நில் என் முன்பே.

          

Thursday, 28 April 2016

சித்திரை மகளே வருக


சித்திரை மகளே வருக.
என் சித்தம்  தெளியவே நீ வருக.
சித்திரைக்கு உத்தமம்
என்று பெயர் உண்டு நீ வருக.
முட்டாள்தனம்  வகுத்த
சித்திரை மகளே வருக.

தமிழரின் புத்தாண்டு மகளே நீ வருக.
தரணியிலே வறட்சியை
உணர்த்திய மகளே வருக.
நித்திரையை பறித்து சித்திரவதை
செய்யும் மகளே நீ வருக.
உடை மீது உடல் வெறுப்படையச்
செய்யும் மகளே நீ வருக.

மதுரையை எரித்த கண்ணகியை
நினைவுறுத்தும் மகளே வருக.
கதிரவனின் அனல் வேகத்தை
கனல் பரப்ப செய்யும் மகளே நீ வருக.
குளிர்ந்த. நீர் தேடி விழுந்து குளிக்க
பாதம் நகர்த்தும் மகளே நீ வருக.
இளநீரின் மகுத்துவத்தை புரிய
வைக்கும் மகளே  நீ வருக.

எத்தனையோ பௌர்ணமி வந்து போகும்
சித்திரை பௌர்ணமிக்கு
சிறப்பளிக்கும் மகளே நீ வருக.
சேர்த்து வைத்தவன் சொத்தை எடுத்து
நாடு சுற்றி வர நாள் பார்க்க வைக்கும்
சித்திரை மகளே நீ வருக.

முந்திரியை பூத்து சிரிக்க வைக்கும்
மந்திரி மகளே நீ வருக.
முற்றத்திலே உற்றாரோடு நிலாச் சோறு
சேர்ந்து உண்டு முன் வாசலில் படுத்து
உறங்கி விழிக்க ஏங்கும் மனிதர்களுக்கு
ஏக்கம்  தவிக்கும் சித்திரை மகளே நீ
வருக வருக.......////

         

வாழ்க்கை வரமா சாபமா??,

வாழ்க்கை  ....வரமா? சாபமா? ஆராய்ச்சியில்
                  இறங்கியோர் பலர் இன்று இல்லை
வாழ்க்கை ....வரம் என ஆணித்தனமாக சொல்லும்
                     மனிதர்களும் இல்லை
வாழ்க்கை ... சாபம் தான் என்று சட்டசபையில்
                        ஓங்கி குரல் ஒலிக்கவும் இல்லை
வாழ்க்கை ...என்பதை இறுதி வரை வாழ்ந்து
                       முடிக்கலாம் என உறுதி மொழியும் இல்லை.

வாழ்க்கையை ... எப்படியும் வாழலாம் என்பவனுக்கு வரம்.
வாழ்க்கை ..... என்றால்  இப்படித்தான் வாழ
                               வேண்டும் என்பவனுக்கு சாபம்.
வாழ்க்கைக்கு..... வரை அறை வகுத்து வாழ்வபனுக்கு
                                     அது இன்பம்.
வாழ்க்கையில் ... வலிகளை சுமப்பவனுக்கு அது துன்பம்.
வாழ்க்கையிலே ... சாதித்துப்பார் சாதனையை
                                         யோசித்துப் பார்.
வாழ்க்கை .... வரம் எனப் புரியும் அழகாய் தெரியும்.

வாழ்க்கையில் .. எல்லாம் அனுபவிப்பவனுக்கு
                                     அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ....நல்ல நட்பின் உறவு கிடைத்தால்
                                     அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ..நினைப்பதெல்லாம் நடந்து முடிந்தால்.
                                   அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ...நமக்கு என்று ஓர் இடம் மக்கள்
                             கிடைத்தால் அது சொர்க்கமோ சொர்க்கம்.

வாழ்க்கையில் ...நினைப்பது ஒன்று நடப்பது
                              ஒன்றாக அமைந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோகமே நிரந்தரம் என்றால்
                                 அது துக்கம் .
வாழ்க்கையில் ...விரத்தி துரத்தி வந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோதனையே தொடர் கதையானால்
                                    அது துக்கம் .

வாழ்கையில் ... அனைத்தும் கிடைத்து பிள்ளை
                                செல்வம் கிடைக்கா விட்டால் துக்கத்தின் மேல் துக்கம்.
வாழ்க்கை  .... வரம் என்பான் துன்பம் நெருங்காதவன்
வாழ்க்கை .... சாபம்  என்பான் வேதனையில் மூழ்கிப்போனவன்.
வாழ்க்கை ....வரமா? மாபமா? என்றால் விடிவு
                            இல்லாச் சாபம்  முடிவு இல்லா வரம்.
வாழ்க்கைக்கு .. விடை தேடி புறப்பட்டால் இறுதி
                                வரை கிடைப்பது கேள்விக்குறி போன்   நாமம் .
வாழ்க்கையில் ... நாம் பெற்ற வரம் மனிதனாக பிறப்பு எடுத்த
                              வரம் ஒன்றேதான் என்பேன்  நான்.
                                    

Wednesday, 27 April 2016

இது நிஜம்

இனிக்க இனிக்க. உரையாடி
இள நெஞ்சங்களை கொள்ளை
கொண்டு  இழிச்ச வாய்
மக்களடா இவர்கள்  என்று  பச்சை
குத்தி விட்ட எம். பியடா நம்
மாவட்ட எம்பி .

ஓட்டுக்கு ரோட்டுப் போட்டான்
ஓட்டுப்போட்ட மை போலே
களைந்து விட்டதடா  அவன்
போட்டுத் தந்த ரோட்டும் .

பாதை போட்டவனே பாவமாக்கி
விட்டானடா சுயநலக் கரன்
செய்த செயலாலே சவுக்கடிப்
பாதை. சிதையுண்டு போனதடா.

   
(தளவாய் பாதை இவை  இலங்கை )

மேலோக உரையாடல்

பூ உலகிலே பூமிமேலே வாழும்
மனிதர்கள் எப்படி என்று கால
தேவைனைக் கேட்டேன்.

காலத்தால் கணிக்க முடியாத
கொடியவர்களே வாழ்கிறார்கள்
காலம் முடியும் தறுவாயிலும்
கொடுமைகள் புரிகின்றார்கள்  (என்றான் )

செல்வந்தர்களின் சொல்
வாக்கு எப்படி  என்றேன்.

சொல்லச் சொல்ல இனிக்கும்
சொல்லி முடிப்பார்கள் என்றான்.

சொன்ன வாக்கை நிறைவேற்றி
வைத்தது உண்டா என்றேன்.

சொன்ன வாக்குறுதியை காற்றில்
விட்டு விட்டு தன் இல்லத்தை
சொர்க்கம் ஆக்கியவர்களே
அதிகம் உண்டு என்றான்.

அறிவு என்று ஒன்று இல்லாத
மனிதர்களா அவர்கள் என்றேன்.

அறிஞர்களும் கவிஞர்களும்
விஞ்ஞானினியும் அஞ்ஞானியும்
உண்டு ஆனாலும் மடையர்களைத்
தான் நான் அதிகம் கண்டேன் என்றான்.

வேறு என்ன கண்டு வந்தீர்
கூறும் அனைத்தையும் என்றேன் .

நீர் இன்றி ஆகாரம் இன்றி
தெருவோரமாக மழலைத்
தொழிலாளியைக் கண்டேன்
கண்ட நொடி மனம் நொந்தேன்.

கவலை கண்ணீரோடு காதலர்களைக்
கண்டேன் சாதி மத வெறியர்களின்
பொல்லாத கடும் கோபம் கண்டேன்.

திட்டித்தீர்க்கார்கள் பாதை ஓரம்
நின்று கால தேவனாகிய என்னையும்
உயர்ந்த. ஜாதியின் மரண நேரத்தில்
கீழ் ஜாதியையும் இணைத்து காலத்தை
முடித்துக் கொண்டேனாம் .

உயர் ஜாதியின் உடல் அருகே
கீழ் சாதியின் உடலும் உண்டாம்
கையில் சிக்கினால் பக்கத்தில்
என் உடலும் உண்டு என்று முட்டி
மூதி ஓடி வந்து நின்றேன் உன்
முன்பு இதுதான் பூலோக வாழ்வு
என்னை நம்பு என்றான்...../////