கனவில் வந்தவளே
கண்முன் வருவாயா.
*************************
கனவில் வந்தவளே
கண்முன் வருவாயா?
நினைவைத் தின்றவளே
நித்திரைக்குமுன் நிற்பாயா?
பசியைக் கலைத்தவளே
புசித்திடவே அழைப்பாயா?
பருவம் உணர்த்தியவளே
புருவம் திறந்திடுவாயா?
உளறல் கொடுத்தவளே
உள்ளத்தைத் தருவாயா?
உயிரைக் குடிப்பவளே
உயிரோடு இணைந்திடுவாயா?
ஏங்கித்தவித்திடச் செய்தவளே
ஏக்கம் கரைத்திடுவாயா?
ஏகாந்தமான என்னவளே
ஏமாற்றம் கொடுத்திடுவாயா?
காத்திருக்கச் செய்திடுவாயா?
சேர்த்தணைக்க இணங்கிடுவாயா?
திரையிட்டு மறைத்திடாமல்
முறையொன்றோடு வந்திடுவாயா?