அன்னக்கிளியே
**********************
நிலவென நின்றாளே
நினைவினைக்
கொள்ளையிட்டாளே /
நிமிடங்கள் தாண்டியும்
நில்லாமல் துடிக்கும் /
இதயத்தைக் கொன்றாளே
நிலமையை யாரிடம் /
சொல்வேன் தூதென
யாரைத்தான் விடுவேன்/
துள்ளும் பருவமடி
அள்ளும் உருவமடி/
கள்ளுப்போல் போதையடி
சொல்லிக்கொள்ள வேணுமடி/
ஒத்தை ரோஜாவும்
ஒத்தனம் போடுதடி/
மொத்தமாய் மோகமும்
மேகமென
மெத்தையிடுகின்றதடி/
சந்தையிலே சொந்த
பந்தம் கூடுமடி/
மந்தைவெளியிலே
வந்து விடு அன்னக்கிளியே /
No comments:
Post a Comment