Thursday, 1 August 2024

கண்ணுக்குள் ஒரு காதல்

கண்ணுக்குள் ஒரு காதல்
********************************

கண்ணுக்குள் ஒரு 
காதல் உருவாக்கியவளே/
கனிந்து பழம் 
பறிக்கும் முன்பாகவே/

பிரிந்து செல்வது 
நியாயமோ என்னவளே/ 
மண்ணுக்கு இரையாகி
விண்ணுக்கு விரைந்தாலும்/

பெண்ணுக்கு கொடுமை
இளைத்திடாது என்னிதயம்/
நுண்ணங்கி போல் 
உள்ளம் நுழைந்தவளே/

நன்னாரி வேராகவே
என்னுயிர் பற்றியவளே/
தண்ணீரும் கண்ணீரும் 
அருந்திடும் விழிகளும்/

சொந்தமென வந்திடு 
வாழ்க்கையைக் காத்திடு/
குற்றுயிரும் கொலயுயிருமாய்
தத்தளிக்கிறது ஆத்மாவுக் 
விடுதலை கொடுத்திடு/ 

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment