Monday, 12 August 2024

ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அதிருதே சூழல்
*************************************************
ஆர்ப்பரிக்கும் வெள்ளம் அதிருதே சூழல்.
ஆதாயம் தேடி சேதாரமாய்ப் போனதே.
ஆட்சியும் சில மக்களும் உணரவில்லை.
ஆபத்து நெருங்கிய பின்னே சிந்தனை.

ஆடிமழை கூடிப் பெருக்கு எடுக்கும் .
ஆற்று வெள்ளம் அணை உடைக்கும் .
ஆங்காங்கே தேங்கும் குழி இருக்கும்.
ஆழி தேடி ஓடிவிட வழியில்லை.

அத்தனையும் அடைப்பு மொத்தமாய் அவகரிப்பு.
அடுக்கு மளிகையிலும் ஓலைக்குடிசையிலும்  
மழைநீரின் இருப்பு.

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment