ஏமாறாதே பிறரை ஏமாற்றாதே
************************************
தோற்றம் கண்டு
நீயும் ஏமாறாதே./
சுயநலம் கொண்டு
பிறரையும் ஏமாற்றாதே./
பாவிகளை நம்பிடாதே
பாவத்தை விதைத்திடாதே./
பாசாங்கான பாசம்
கொண்டோரை நெருங்கிடாதே/
யாவரும் ஒன்றென
எண்ணம் விதைத்திடாதே/
கொடுப்பதைக் கெடுக்காதே
கெடுவாரோடு இணங்காதே /
அடுத்தவனுக்குக் குழியிடாதே
குழியிடுவோருக்கு இரங்காதே/
பறித்தெடுத்தல் நிலைத்திடாதே
விரும்பியிடுவதை மறுத்திடாதே/
மனிதனே மனிதமோடு
வாழ்ந்திட மறந்திடாதே /
No comments:
Post a Comment