Monday, 12 August 2024

பிரியாதே என்னை விட்டுப்
பிரியமானவளே(னே)எந்நாளும்.
****************************************
#பிரியாத வரமொன்று நான் 
கேட்பேன்.
#பிரிவொன்று வருமாயின்  தானே இறப்பேன்.
#பிழையென்று உரைப்போர் பலர் 
உண்டு.
#பிறருக்குத் தெரியுமோ ஆழக்காதல் என்று.

#பிறந்தேன் எதற்காகவோ மலர்ந்தேன் உனக்காக.
#பிசைகிறதே நெஞ்சையும்
பிணைப்பின் நினைவாக.

#பிறகு எவ்வண்ணம் நான் மறவேனடா.
#பிச்சிப்பூவாய் பெண்மையிடம்
 மென்மையான உள்ளமடா/
#பிச்சுப் போட்டு விட்டுப்
போகாதேடா

#பிரமன் அழைக்கும் நாள் வரையிலும்.
#பிடியின் தடியாவோம் ஒருவருக்கு ஒருவராகவேடா.
#பிரியாதே என்னை விட்டுப்
#பிரியமானவளே(னே).எந்நாளும்.

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment