இயற்கையே உனக்கு
ஏன் இந்தச் சீற்றம் .
***********************
இயற்கையே பொறுத்து
அருள்ளால் என்ன ?
மக்களை ஏற்றுக்
கொண்டு மகிழ்ந்தாலென்ன ?
உன்னையே நம்பி
உன்னிலே தஞ்சமானதை /
நீயும் மறப்பதில்
நியாயமோ சொல் அன்னையே/
எத்தனை உயிர்கள்
அத்தனை ஆத்மாவின் /
ஆசைகளையும் தேவைகளையும்
அறிந்தவள் நீ அல்லவோ/
பாவம் தீர்க்கவா
நீராகவே பயணித்தாய் /
இப்போது நீயே பாவியானாயே
மனிதர்கள் இடையினிலே/
சீற்றம் குறைத்திடு
அழிப்பை நிறுத்திடு /
வேண்டுதலை ஏற்றிடு
உயிரினங்களைக் காத்திடு நீயே /
No comments:
Post a Comment