Friday, 22 July 2022
Wednesday, 20 July 2022
இது என்ன புதுமையா
புதைக்கப் படும்
உடலுக்குப் பின்னால்
வன்கொடுமைகள்
மறைக்கப் பட்டு விடுவது.
காச்சி மூச்சி என்று
கூச்சல் இடுவோர் எல்லாம்
மிஞ்சி மிஞ்சி போனால்
ஒரு மாதகாலம் நீடிப்பார்கள்
பெற்றவளுக்குத் தான்
துயரம் நெஞ்சில் நின்று இடிக்கும் .
கன்னித் தன்மை இழந்து தான்
கல்வி பயில வேண்டும் என்றால்
கற்புக்கரசி கண்ணகி பிறந்த நாடு என்ற பெருமை எதற்கு.
ஒன்றா இரண்டா கேட்டும் பார்த்தும்
நாம் கடந்து வந்து விட்டோம்
கல்லுரி வளாகங்களின் செயல்களை.
எரிக்காதீர்கள் உடைக்காதீர்கள்
கல்விக்கான உடமைகளை
அறுத்துப் போடுங்கள்
கடமை தவறியவனை
அடங்கி ஒடுங்கும் ஒழுங்கற்ற நிருவாகம்.
மாணவ மாணவிகளின்
இறப்பும் மக்களின் கொந்தளிப்பும் கள்ளக்குறிச்சியில் மட்டும் நிகழவில்லை .
மெனக்கிட்டு யாரெனும்
கணக்கிட்டுக் காட்டினால்
தினுக்கிட்டுப் போய் விடும் சமுதாயம் .
பல கனவோடும் இலட்சியத்தோடும்
கல்வி கற்றுக்க நுழைந்திடும்
எத்தனை உயிர்கள்
கயவர்களின் காமப் பசிக்கு இரையாகி மண்ணுக்கு விதையாகி விடுகின்றனர்.
மன்னிப்பு என்னும்
வார்த்தையை அழித்து விட்டு
மரணம் என்னும்
சாஸ்திரத்தை கிறுக்கி விட்டு
அவனின் மூச்சை நிறுத்தி
இக் கொடுமைகள் தொடராமல்
மக்களே நீங்களே முற்றுப் புள்ளியிடுங்கள்.