Friday, 31 May 2024

#ஆணும் #பெண்ணும் 
#நிகரெனக் #கொள்வோம்.
*******************************

ஆணும் பெண்ணும் 
நிகரெனக் கொள்வோம் /
அவளும் நாமும்
ஓருயிரெனச் சொல்வோம் /
சரித்திரம் படைத்திட 
இடம் கொடுத்திடுவோம்/
விசித்திரங்கள் பல
இணைந்தே படைத்திடுவோம் /

பாரதம் போற்றும் 
பாரதியின் கூற்றை/
பாவையர் எல்லோரும்
மனதால் வெல்லட்டும் /
அடுப்படியோடு முடங்கும் 
எண்ணத்தை மெல்லட்டும்/

கற்றலிலும் காற்றலிலும்
ஓங்கியே  துள்ளட்டும்/ 
ஏங்கியவளோ உள்ளத்தில்  
இன்பத்தை அள்ளட்டும்/

ஆர் எஸ் கலா 

(#நன்றி)

Monday, 27 May 2024

நீயே என் உலகமடா
************************
நோக்கும் வேளையில் முகம் 
சுழிக்கிறாய்/
தேடி வந்தால் பேச்சைக் 
குறைக்கிறாய்/

சாடிக்குள் மலராக வாடிக்
கிடக்கிறேன் /
கேடியின்  நெஞ்சத்தை நாடி
நிக்கிறேன் /

ஏனோ என்னை நெரிந்தியாய்ப்
பார்க்கிறாய் /
தானே நானும் வருந்தியே
துடிக்கிறேன் /

நோகும் உள்ளத்திற்கு மருந்தாய்
வருவாயோ/
காவு கொள்ளும் நோயாய் 
மாறுவாயோ/

மறந்து வாழ்ந்திடும் வாழ்வு
சாத்தியமில்லையடா/
சத்தியமாய்  நீயே என் 
உலகமடா/

ஆர் எஸ் கலா

Wednesday, 22 May 2024

நாணியது பெண்ணோ
****************************
நாணியது பெண்ணோ
நாவற்பழக் கண்ணோ/

நளினம் கொண்ட இளைய 
மங்கையே/

நான் பாதம் நனைத்திடாத 
கங்கையே/

நாளும் பொழுதும் 
சுவைத்திடலாமோ தேனே/

அல்லியாய் மலர்ந்து
மல்லியாய் மயக்கியவளே/

அத்தராத்திரியிலும் கள்ளியே
நீ விழித்திரு/

அருந்திய மதுவாய் 
விருந்துக்குக் காத்திரு/

அரும்பு மீசைக்காரன்
நெருங்கையிலே பஞ்சாயிரு/

கிறுக்கன் என்
கிறுக்கள்களைப் பார்த்து/

சிறுக்கியவளும் சிரிக்கையிலே
சிதறியது முத்தோ/







Friday, 17 May 2024

கிராமங்களில்

சிறுபிள்ளையானாலும்
நறுக்கெனக் கேள்வி தொடுத்தால். 
திடுக்கிட்டு நிமிர்ந்திடச்
 செய்திடும் நேரமும் உண்டு .

ஊழல் செய்து ஊதியம்
பெற்றிடாத .
கிராமசேவகர் இருக்கும் ஊரில் .
கைப்பிள்ளை கால்பிள்ளை 
வைத்திருப்பதில்லை.

கடமை எண்ணும் பெயரில்
மடமையான செயலில் இறங்கி மூக்கறுபட்டு போவதுமில்லை.

அமைதி காப்போரெல்லாம் 
அறியாமையின் இருப்பிடமில்லை.
தகாத வார்த்தையை உரைத்து 
சாதித்திட நினைப்பதுமில்லை.

தக்க நேரத்தில் தகுதியான வார்த்தைகளையும் .
தகுதியான ஆதாரங்களையும்.
முன் நிறுத்தி சாதிக்கும் வல்லமை
பெற்றவர்களும் கிராமங்களில் 
வசிப்பார்கள் என்பதே உண்மை.😏

பாரியின் சபதம்


கண்ணகி வீட்டுத் தெரு முனையில்
காக்கா புடிச்ச கருவாச்சி /
நாக்கைப்  புரட்டிப் போட்டு
வார்த்தையை உருட்டி விட்டாள் /
வந்து விழுந்துச்சு காதிலே
அருவா முனையாட்டம் /

திக்கெட்டுப் போனேன் நானும்/
வெக்குண்டு போனார்
கூட்டிக்கிட்டுப் போன மாமனாரும் /

வாயாடி எம்புட்டு பேசிப்புட்டா /
சிம்பட்டு சின்ன மாமியாரோ 
என்னைய நோக்கி கும்பிட்டு 
வழி இனுப்பி வச்சிப்புட்டா /

நொங்குக் கண்ணுக் காரி
இங்கிட்டு வாடி/
மங்கிக்காத பொன் தாலியாலே
நங்கூரம் போட்டுக்கிறேன் 
உன்னைய  வாரி /

அப்புறமா பார்த்துக்கோடி 
ஒன்னோட வாழ்க்கையோ சேரி /
என்னோட காட்டில்  மாரி /
இத்தனையும் நடத்திக் 
காட்டிக்குவான் இந்த பயப்புள்ள பாரி/

ஆர் எஸ் கலா

ஊருக்கு நன்மை

உரக்க உண்மையை உரைப்பவன் 
வெறுக்கப் படுகிறான்/
உரையிலே பொய்மையைத் 
திணிப்பவன் போற்றப் படுகிறான்/

ஊருக்கு நன்மை 
நினைப்போரெல்லாம்
துரத்தப் படுகிறான்/
ஊரையே அடித்து உலையில் 
போடத் துடிப்பவர்களோடு
 கொண்டாட்டம் போடுகிறான்/

பொல்லாத உலகிலே 
சொல்லயிலாத விடையங்கள் எத்தனையோ உண்டு /
அத்தனையும் சொல்லி விட்டால்
மொத்தமாய் மொத்தும்
 ஊரெல்லாம் இணைந்து/

பக்தனாய் வாழ்வான் 
சித்தனாய் வாழ்வான் .
முற்றும் திறந்த 
முனிவனாய் வாழ்வான்/

சுதாரித்துக் கொஞ்சம் 
கவனித்துப் பார் 
சுத்தமற்ற வாழ்க்கையின் 
கருத்துக் கணிப்பின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருப்பான்/ 

பத்துக்குப் பத்து போலி முகம் 
ஆனாலும் பக்கத்தில் நோக்கையிலே கணிசமாய் மறைக்கிறது 
அவது திறமையான  நடித்திடும் குணம்/

(இவை பெண்ணுக்கும் பொருந்தும்😏)