நீயே என் உலகமடா
************************
நோக்கும் வேளையில் முகம்
சுழிக்கிறாய்/
தேடி வந்தால் பேச்சைக்
குறைக்கிறாய்/
சாடிக்குள் மலராக வாடிக்
கிடக்கிறேன் /
கேடியின் நெஞ்சத்தை நாடி
நிக்கிறேன் /
ஏனோ என்னை நெரிந்தியாய்ப்
பார்க்கிறாய் /
தானே நானும் வருந்தியே
துடிக்கிறேன் /
நோகும் உள்ளத்திற்கு மருந்தாய்
வருவாயோ/
காவு கொள்ளும் நோயாய்
மாறுவாயோ/
மறந்து வாழ்ந்திடும் வாழ்வு
சாத்தியமில்லையடா/
சத்தியமாய் நீயே என்
உலகமடா/
No comments:
Post a Comment