கண்ணகி வீட்டுத் தெரு முனையில்
காக்கா புடிச்ச கருவாச்சி /
நாக்கைப் புரட்டிப் போட்டு
வார்த்தையை உருட்டி விட்டாள் /
வந்து விழுந்துச்சு காதிலே
அருவா முனையாட்டம் /
திக்கெட்டுப் போனேன் நானும்/
வெக்குண்டு போனார்
கூட்டிக்கிட்டுப் போன மாமனாரும் /
வாயாடி எம்புட்டு பேசிப்புட்டா /
சிம்பட்டு சின்ன மாமியாரோ
என்னைய நோக்கி கும்பிட்டு
வழி இனுப்பி வச்சிப்புட்டா /
நொங்குக் கண்ணுக் காரி
இங்கிட்டு வாடி/
மங்கிக்காத பொன் தாலியாலே
நங்கூரம் போட்டுக்கிறேன்
உன்னைய வாரி /
அப்புறமா பார்த்துக்கோடி
ஒன்னோட வாழ்க்கையோ சேரி /
என்னோட காட்டில் மாரி /
இத்தனையும் நடத்திக்
காட்டிக்குவான் இந்த பயப்புள்ள பாரி/
ஆர் எஸ் கலா
No comments:
Post a Comment