Wednesday, 31 August 2022
வாழ்த்துப் பா
Tuesday, 30 August 2022
வேற்றுமை போக்கிடு
முதலிடம்
Monday, 22 August 2022
அந்த மகமாரி
Friday, 19 August 2022
பூ பொலிவு அழகு
*******************
பூவோடு ஒப்பிட்டேன்
நாணம் கொண்டாள் //
பூவையவள் புன்னகையிலே
எனைக் கொன்றாள் //
பொலிந்த சிலையாய்
மெலிந்து நின்றாள் //
பொழியும் மழையில்
மெய்மறந்து சென்றாள் //
அழகு ஓவியமாய்
என்னைக் கவர்ந்தாள் //
ஆழியலையாய் வந்து
நெஞ்சத்தில் அமர்ந்தாள்//
பூத்த காதல்
சொட்டுது தேனாய் //
பொலிவு கொடுக்கிறது
கவிதையும் தானாய் //
Wednesday, 17 August 2022
பொல்லாத மனசு பொங்குது மாமா
***************************************
மாமோய் நீ அள்ளாத ஏக்கம்
தாக்கியதால். /
சொல்லாத காதல் கிள்ளுது
ஆமா /
நில்லாமல் தாகம் உன்னைத் தேடுது
மாமா /
புல்லாக நானும் நின்று வாடுறேன்
ஆமா /
அட ஊற்றெடுக்கும் ஆசை ஊர்ருது
ராமா/
சேர்த்தணைக் விரைந்து வந்திடு
ராமா/
பார்த்திட விழி தினம் நோக்குது வழி
ராமா/
ஆற்று வழியே வந்து காட்டிடு முகம்
ராமா /
திறந்த இதயம் பரப்புது சூடு
ஏனோ?
பிறக்கும் மோகம் இறகு விரிக்கிறதே
அது தானோ?
சுரக்கும் வியர்வை நனைக்குது உடலை வீணா /
கடந்திடும் நாட்கள் கொடுக்குது துயரக்
கனா /
நடக்காத விளையாட்டுக்கு நெஞ்சம்
கேட்குது பன்னீர் /
தொடுக்காத விரல்கள் தொடைக்குது கண்ணீர்/
நீதானே என்னுடலோடு கலந்தோடும்
செந்நீர் /
இன்னும் மௌனம் தேவை தானா
மாமா/
நெல்லா கல்லா முள்ளா உன் மனசு
மாமா/
எரியும் அடுப்பில் ஏற்றிய கொதி நீராய் இன்னும்/
பொல்லாத யென் மனசு பொங்குது
மாமா/
Monday, 8 August 2022
என்னுயிர் போய் விட
எத்தனை யுகமாகிடுமோ இல்லை
இந்நொடியே மாண்டிடுவேனோ
நான் அறியேன் கண்மணியே.
இறக்கும் வரை எனது
கண் மணிக்குள் உன் ஒளியே
எனது கரம் தவறவட்ட சின்ன மணியே.
என் விழிகளுக்குள்
நித்தமும் மழைத்துளியே
அத்துளியிலே முளையிடுன்கிறது
நெஞ்சத்திலே கொலைவெறியே
இருப்பினும் கொல்லும் நோக்கம்
என்னில் இல்லையடா கண்மணியே .
உன்னைக் கொன்று கொள்ளையிட்டவர்
துன்பத்தில் தவிர்த்து தெள்ளாகத் துடித்து
வெளியே சொல்லாது துயரத்தை மென்று
தன்னைத் தானே மாய்த்திடும் வரை
அடியும் பிடியும் தடியும் எமக்குத் தேவையில்லையடா கண்மணியே.
விடியும் ஒவ்வொரு பொழுதும்
எனக்காகவும் விடிந்திடும்
என்னும் நம்பிக்கையில்
தேடிச் சென்று இறைவனிடம்
பிராத்தனையின் பிடியில் நகர்ந்து
நாளைக் கழித்திடுவேனடா கண்மணியே.
Friday, 5 August 2022
இப்போதெல்லாம்
கொழுத்திருக்கின்றதாம் உடம்பு
இருக்காதா பின்ன.
பூரிப்பிலும் இடை
பூரி போல் பொங்கிடுமாம்
நாறிப் போன
பணியில் இறங்கி விட்டால்
தேடிப் போடும்
ஔடதம் ஊறிப் போய்
ஊதிப் போன
பலூனாக உடலை மாற்றிடுமாம்
தொடரும் போது எதுவாயினும்
பாணிப்பூரி போல் இனித்திடுமாம்
பாலாய்ப் போன காலம் கை விட்டால்
பல இடத்தினிலே ஊரார்
மூக்கில் நாத்தம் அடித்திடுமாம்.
படுக்கப் பாய் இல்லாத வீட்டில்
பகட்டு வாழ்க்கை பட்டு விரிக்குதாம்.
எடுத்த எடுப்பினிலே இழவு வீட்டிலும்
இரட்டை மாலை ஜொலிக்கிதாம்.
கடுகளவும் தங்கம் இல்லாதவள்
காதினிலே சுளகளவு தோடு மின்னுதாம்.
உழைத்துச் சேகரித்தவனுக்கு
இவை பெருமைதானம்மா
எடுத்துக் கொண்டோருக்கு
இது சிறுமையான செயலம்மா .
கடகடவென
நினைப்பதெல்லாம் நடக்குதாம்
தேக்கி வைத்த ஆசையெல்லாம்
படபடவென பறக்குதாம்.
தோண்டிய குழி நீரும் உன் பெயர்
சொல்லி தாகம் தீர்க்குதாம்.
மழை வெயில் பாராமல்
பசி பட்டினியோடு நோய் தாங்கி
உழைத்துச் சேகரித்த உனக்கென
கட கடவென பரிகாரமாய் ஒவ்வொரு
யுகமும் புண்ணியம் படி கட்டுதாம்
கேட்டறிந்ததுமே பெற்றவள் விழியினிலே ஆதங்கத்திலும் ஆனந்தத்திலும்
கண்ணீர் அருவி கொட்டுதம்மா