Sunday, 31 January 2021
Saturday, 30 January 2021
யாரடி நீ
(#ர முதல் எழுத்துக் கவிதை)
ரகசியமாகக் கனவில்
நுழைந்த சிலை/
ரதி தேவி வடிவான கலை/
ரம்பம் கொண்டு அறுக்கும்
விழிகள்/
ரம்புட்டான் கனி போன்ற
இமைகள்/
ரத்தினம் போன்று யொளிக்கும்
பற்கள்/
ரவா லட்டாக சுவையூட்டும்
பார்வை/
ரங்கோலி கட்டிய சின்னக்
குயில்/
ரம்பை வடிவான பெண்
மயில் /
ரதியே என் கண்ணிலே
நிறைந்தாயடி/
ரஞ்சினி ராகினி மோகினி
நீயாரடி?
தேர்வுக்கு நன்றி😊
Wednesday, 20 January 2021
தைப் பூசம்
இன்று முருகனுக்கு பெரும் விழாவாம் /
தெருவெங்கும் வெள்ளி ரதம் உலாவாம்/
கோலகலமான கொண்டாட்டமாம் /
கோலலம்பூரிலும் மக்கள் கூட்டமாம் /
போக்கு வரத்து பெரும் நெருசலாம் /
பாதை எங்கும் சிதறு தேங்காய்க் குபியலாம் /
வீதியெங்கும் அணிவகுக்கின்றது தண்ணீர்ப் பந்தலாம் /
கையை நீட்டிப் பெற்றுக் கொண்டால்
தட்டி விட்டு நுழைகின்றார்களாம்
மந்தை போல் மனிதர் கூட்டமாம் /
ஆறு முகனுக்கு பாலால் அபிசேகமாம் /
இவை தைப் பூசத் திரு நாள் விசேசமாம் /
படியேறி பாத யாத்திரைப் பயணமாம் /
பாலகன் முருகனிடம் பக்திப்பரவசத்துடன்
வைக்கின்றனர் சிறு வேண்டு கோளாம் /
தைப் பூசத் திரு நாள் வாழ்த்துகள் ❤🙏
Monday, 18 January 2021
காவியுடைக் கன்னி
வரம்பு மீறிய வார்த்தைகளால் .
நரம்பு இல்லா நாக்கால்
காவியுடைக் கன்னி ஒருத்தி குட்டிய
ஒளி நாடாவைக் கண்ணுற்றேன்.
ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும்
பார்த்து முடித்தேன்.....!
அறுபதை இருபது எச்சரிக்கை செய்கிறது
தன் பருவம் மறந்து வயது மறந்து
பலர் பார்க்கும் ஒளி நாடா இவை என்பதையும் மறந்து கரிச்சுக் கொட்டுகிறது
ஆண்மை இருக்கா அவனுக்கு என்று ஆணவத்தோடு கேட்கிறது காவி உடை
போர்த்தியவாறு பூத்திருக்கும் அந்தச் சின்ன மொட்டு.....!
கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய
கறுப்பு தங்கத்தைப் பார்த்து
செக்கச் சிவந்த கருகமணி போட்ட சிட்டு உத்திராட்சைக் கொட்டையும்
நெற்றியிலே பட்டையும் போட்ட வாறு
சிறு பெட்டைக் கோழி ஒன்று கொக்கரிக்கின்றது அலைபேசி முன் நின்று..!
நன்றாகவே கொம்பு சீவி விட்டு இருக்கின்றார் நித்தியானந்தா
சுவாமி( சீ சீ )சாமி அம்மாடியோ
ஆத்தாடியோ என்ன ஒரு பேச்சு வம்பு உன்னைத் தேடி வரப்போகிறது
என்பது உறுதியடி பெண்ணே.....!
புன்னகை உதிர்த்திய படி
பூத்திருக்கும் இளம் பெண்ணே
நீ யார் பெற்றவளோ நான் அறியேன் அகங்கார உரை வேண்டாமடி பெண்ணே...!
ஆண்டாள் நடமாடியதும் இல்லை ஆண்டாளைக் கண்டோரும் இல்லை
அது நிஜமோ கற்பனையோ மாயமோ மந்திரமோ இறைவன் என்பதே ஒரு
புரியாத புதிர்தான் அவர் அவர் கற்பனைக்கு ஏற்றால் போல் வழிபாடு செய்கின்றோம்....!
அவ்வளவு தான் இதற்காக.
மலையைப் பார்த்து நாய் குரைப்பது போல் நாம் நடக்கலாமா? இறைவனுக்கு முன்
ஆபத்து வேளை நம் எதிரே வந்து நிற்பவன்
மனிதனே என்பதை நினைவில் வையடி நித்தியானந்தா சித்தி பெற்ற முந்திரி விதையே.......!
அதிகமாக துள்ளாதே தாயே
ஆண்டவன் உண்டு என்று
உரைப்போரும் ஆண்டாள்
பற்றி விளக்கம் கொடுக்க சிந்திக்கும் வேளை இதுவடி மானே போதுமடி
உன் பேச்சு ஆபத்தை தேடி
அலையாதே ஆச்சிரமத்து அழகியே ......! 😊
Thursday, 14 January 2021
என்னுயிர் சுவாசமே
பேருந்துப் பயணத்திலே
முன்னிருக்கை அமர்ந்தவளே /
பேரழகைக் காட்டி
பேரதிர்ச்சி கொடுத்தவளே /
பாவாடை தாவணியிலே
பாராமல் போனவளே /
பாவியென் நெஞ்சத்தைக்
கிள்ளிச் சென்றவளே/
துள்ளிடும் ஆசைகளோ
உலாவுதடி சின்னவளே/
துரத்திடும் ஏக்கமும்
எனையிறுக்குதடி என்னவளே/
கண்ணால் பறித்தெடுத்து
மனதினிலே விதைத்தேனடி /
கண்ணீர் ஊற்றியே
மரமாக வளர்த்தேனடி/
காலமும் கடப்பதினால்
கவலையும் பிறக்கின்றதடி /
பேச்சு இழந்து
மூச்சடைச்சுப் போகையிலும்/
காற்றைத் துரத்தி
உன்னைக் காத்திருக்கேனடி/
உடலோடு கலந்திடு
என்னுயிர் சுவாசமே/
Saturday, 9 January 2021
மின்சாரக் கண்ணா
வெட்டருவாள் எதற்குடா
பெண் மனதை வெட்டி வீழ்த்த
உன் விழி இருக்கையிலே .....!
சுட்டெரிக்கும் சொல்
இல்லை உன்னிடம்
சுண்டி இழுக்கும் சுடர் நீயடா .......!
கட்டெறும்பாக ஊருவதோ
உன் நினைவடா
நெஞ்சினிலே கட்டழகன் உன் உருவச்சிலையடா .....!
ஆழமான பாசக்
காரன் நீயடா.
அழுத்தமன
மனசுக்காரனும் நீதானடா.....!
சாதிக்கத் துடிப்பதோ
உன் உள்ளமடா .
சாதி என்னும்
கூண்டுக்குள்ளே -நீ
அடைபட்ட சிங்கமடா .....!
வெட்கத்தை எப்படியோ
அழைத்து விட்டு விட்டாய்
என்னிடம் -நீ பக்கம் அமராமலே
ஏன்! என பதில் கூறடா ....!
உன் இதழ் உருட்டி விடும்
மெல்லிய புன்னகையில்
குளிர்ந்து போனது
என் நாணமடா ......!
காமம் கொண்டு
நீ நெருங்கையிலே
கட்டிலும் தாங்கிடுமோ
என்னும் அச்சம் கண்
விழிக்கத்தான் செய்யுதடா .......!
கனவில் மட்டும் கண்ணா
நீ கண்ணடிக்கிறாய்
அதனாலே கண்ணீரில்
மிதப்பதோ நானடா .........!
காலம் கனியுமா உன்
இனிய அன்பு கிடைக்குமா ?
உன் தேக்க மர உடம்பு
திகட்டிடுமோ எனக்கு சொல்லடா .......!
நீ வேம்பாகக் கசப்பாயோ
இல்லை கரும்பாக இனிப்பாயோ.
பலாச்சுளை போல் சுவை கொடுப்பாயோ நான் அறியேன் கள்வனே உள்ளம் கொள்ளை போனது உன்னிடம்
என்பதோ உண்மையடா .....!
தாடிக்கும் விடுதலை கொடு
தாவணிக்கும் விடுதலை கொடு
உன்னை நெருங்கும் சல்வார்
பெண்ணுக்கும் விடுதலை கொடு.
என் தடிப்பான நெஞ்சத்திலே
இருட்டான இதயறையிலே
துடிப்பாக நீயடா தினம் தினம்
துடிப்பதோ அதில் உன் நினைவடா .......!
Subscribe to:
Posts (Atom)