Monday 18 January 2021

காவியுடைக் கன்னி

வரம்பு மீறிய வார்த்தைகளால் .
நரம்பு இல்லா நாக்கால் 
காவியுடைக் கன்னி ஒருத்தி குட்டிய 
ஒளி நாடாவைக் கண்ணுற்றேன்.
ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் 
பார்த்து முடித்தேன்.....!

அறுபதை இருபது எச்சரிக்கை செய்கிறது 
தன் பருவம் மறந்து வயது மறந்து 
பலர் பார்க்கும் ஒளி நாடா இவை என்பதையும் மறந்து கரிச்சுக் கொட்டுகிறது  
ஆண்மை இருக்கா அவனுக்கு என்று ஆணவத்தோடு கேட்கிறது  காவி உடை
போர்த்தியவாறு  பூத்திருக்கும் அந்தச்  சின்ன  மொட்டு.....!

கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய 
கறுப்பு தங்கத்தைப் பார்த்து 
செக்கச் சிவந்த கருகமணி போட்ட சிட்டு உத்திராட்சைக் கொட்டையும் 
நெற்றியிலே பட்டையும் போட்ட வாறு
சிறு பெட்டைக் கோழி ஒன்று கொக்கரிக்கின்றது அலைபேசி முன் நின்று..!

நன்றாகவே கொம்பு சீவி விட்டு இருக்கின்றார்  நித்தியானந்தா 
சுவாமி( சீ சீ )சாமி அம்மாடியோ 
ஆத்தாடியோ என்ன ஒரு பேச்சு வம்பு உன்னைத் தேடி வரப்போகிறது 
என்பது உறுதியடி பெண்ணே.....!

புன்னகை  உதிர்த்திய படி 
பூத்திருக்கும்  இளம்  பெண்ணே 
நீ யார் பெற்றவளோ நான் அறியேன் அகங்கார உரை வேண்டாமடி பெண்ணே...!

ஆண்டாள் நடமாடியதும் இல்லை ஆண்டாளைக் கண்டோரும் இல்லை 
அது நிஜமோ கற்பனையோ மாயமோ மந்திரமோ இறைவன் என்பதே  ஒரு 
புரியாத புதிர்தான்  அவர் அவர் கற்பனைக்கு ஏற்றால் போல் வழிபாடு செய்கின்றோம்....!

 அவ்வளவு தான்  இதற்காக. 
மலையைப் பார்த்து நாய் குரைப்பது போல் நாம் நடக்கலாமா?  இறைவனுக்கு முன் 
ஆபத்து வேளை நம் எதிரே வந்து நிற்பவன் 
மனிதனே என்பதை நினைவில் வையடி நித்தியானந்தா சித்தி பெற்ற முந்திரி விதையே.......!

அதிகமாக துள்ளாதே தாயே
ஆண்டவன் உண்டு என்று 
உரைப்போரும் ஆண்டாள் 
பற்றி விளக்கம்  கொடுக்க சிந்திக்கும் வேளை இதுவடி மானே போதுமடி 
உன் பேச்சு   ஆபத்தை தேடி 
அலையாதே  ஆச்சிரமத்து அழகியே  ......! 😊

      

No comments:

Post a Comment