Saturday, 28 November 2020
Thursday, 26 November 2020
மாவீரர் தினம்
இதே மாதம் ஈழத்தில்
இரத்தோட்டம் கண்டு
காட்டாறும் ஓடவில்லை.😢
மக்களின் கூக்குரல்
ஓங்கி ஒலித்தமையால்
கடலோசையும் கேட்கவில்லை.😢
மண்ணுக்கும்
பசி எடுக்கவில்லை.
மடிந்த பிணம் கண்டு
பேதலித்தமையால்.😢
புகை மண்டலக்
காட்சியிலே
கருமேகம்
தோன்றவில்லை.😢
குண்டு மழை
ஒளியின் முன்னே
கதிரொளியும்
தென்படவில்லை.😢
பாதி உடலோடு
விழிகளும்
பறி போனதால்.
பாதையும்
அறிய முடியவில்லை.😢
மிதி படிகளாய்ப் போனது
பகைவர்களுக்கு
எத்தனையோ சடலங்கள்.😢
சாவின் விளிம்பிலும்
ஈழத்தின் ஏக்கம்
சடுதியிலும்
குருதியின் தேக்கம்.😢
எம்மை விட்டு
என்று மாறும்
அன்றையத் தாக்கம்.😢
கார்த்திகை என்றாலே
கறுப்பு நாளாகவே
நோக்குகின்றது
ஈழத்து வாழ் கண்கள்😢.
(களிப்புற்று மகிழ்ந்த
தாய்த் தேசத்து
அந்நாள் அரசையும்
நினைவு கூர்வோம்
இன்றைய நாளில்😡)
Tuesday, 17 November 2020
நீயும் பாரடா
வீரத்தின் உரமிட்ட நெஞ்சமடா /
வீரியம் நிறைந்த
பால் அருந்திய தமிழனடா/
விழுந்தாலும் எழுந்து விடுவானடா/
வீழ்ச்சி கண்டு முயற்சி தொலைத்திட மாட்டானடா/
உயிரைத் துச்சமென நினைப்பானடா/
உயிர் கொடுத்து
தமிழை மீட்கும் தோழனடா/ உயிர்த்தெழுந்ததுமே உரிமையைக் கேட்பானடா /
உறங்கும் வேளையிலும் விழியிலே உலாவிடும் வீரக் கனவு தானடா/
அச்சம் விதைக்காத ஈழ மண்னடா/
அழிவது தான் தமிழனுக்கே வெட்கமானதடா/
அடிமை வாழ்வை மீட்கத் துடிப்பவனடா/ அரக்கர்கள் இரத்தம் குடிப்பானடா/
எதிர்ச் சொல் உரைப்பானடா /
எதிரியை எதிர்த்து நிற்பானடா / எரிமலையாய் வெடிப்பானடா / எருமைகளின்
கோட்டையைத் தகர்ப்பானடா/
நாடு காக்கத் துடிப்பானடா/
நாட்டுக்காக மாண்ட வம்சமடா/
நாடி நரம்பெல்லாம் எழும்புதடா/
நாளும் பொழுதும் நாங்கள்
தமிழன் என்று உரக்கக் கூறும்
வேளையிலே நீயும் பாரடா //
(#யாழ்சிறி வானொலிக்காக
மாவீரர் தினம் அன்று எழுதியவை )
Saturday, 7 November 2020
துடிக்கும் இதயம் நடிக்காது
நாவால் வெடிக்கும்
வார்த்தை /
காதால் கேட்ட
பின்னும்/
உமக்குத் துயரம்
என்றால்/
தவிக்கின்றது எனது
மனம்/
உதவிடவே நினைக்கின்றது
தினம்/
அன்பினாலே இணைந்தது
உள்ளம்/
சதியினால் விலகியது
நெஞ்சம்/
மதியிலே உமது ஞாபகம்
தஞ்சம் /
ஆகையால் நானும் உனக்காக வருந்துகின்றேன்
கொஞ்சம் /
துடிக்கும் இதயம் என்றும்
நடிக்காது/
Tuesday, 3 November 2020
காதலும் கட்டுப் பாடும்
ஓவியக் கவிதை
*******************
உன்- பாதம் பட்ட மண்ணை
பக்தியோடு நான் எடுத்து.
பட்டுத் துணியில் முடிச்சிட்டு
பத்திரப் படுத்திடுவேனடா.!
நீ- படுத்துறங்கிய பாயை
உதறாமல் மடித்தெடுத்து.
மறவாது ஏக்கம் துரத்தும்
மருந்தென்று தலைக்கடியில் வைத்திடுவேனடா.!
உமது - மேனியில் பட்ட
பருத்தித் துண்டை மொட்டை
மாடி வெயிலில் காய்ந்திடாமல்
மாணிக்கமாய்க் காத்திடுவேனடா.!
நீ-கடித்து
துப்பிய நகங்களையும்
சொறிஞ்சி
கொட்டிய தலை முடிகளையும்
சேகரித்து பூச்சரங்களாய்க் கட்டி
என் மெத்தையின் அருகே
தொங்க விடுவேனடா.!
உனது-வியர்வைத் துளி
முத்தமிட்ட போர்வையிலே
மழைத்துளி பனித்துளி
விழுந்திடாமல்.
குடை விரித்து வைத்து
இதமான வெப்பத்தில்
உலர்த்தி எடுத்து மடித்திடுவேனடா.!
உமக்காக நான் செய்திடும்
சேவைகள் இவைகளடா.
நீ எனக்காக செய்து விடு
ஒன்றே ஒன்றடா..!
என் இதழ் பட்ட உன்
கன்னத்தை மட்டும்
மறவாமல் தவறாமல்
நீ பருக்களிடமும்
தெருப் பூக்களிடமும்
இருந்து பாது காத்தாலே போதுமடா ..!
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
Monday, 2 November 2020
Subscribe to:
Posts (Atom)