Thursday, 6 June 2024

பட்ட கடனுக்காக தேயுது மூச்சி
************************************

மணமகளுக்கு 
தாலியும் ஒரு வேலி/
மாலையிடுபவனுக்கு 
என்ன உண்டு தோழி/

பெண் வீட்டாரிடம் 
வரதட்சணை கோடி/
பொறுத்துப் பார்த்தால் 
மாப்பிளை தெருக்கோடி /

மெட்டியிட்டு திலகமிட்டு 
ஒட்டிக் கொண்டவனுக்கோ /
கட்டில் மேலே 
பூமெத்தையிலே உறக்கம் /

மகளைப் பெற்றவருக்கோ
கட்டாந்தரையே சொர்க்கம்/
ஊரைக் கூட்டி 
விருந்து போட்டாச்சு /

பட்ட கடனுக்காக தேயுது மூச்சி/
தாரை வார்த்த 
தாயாருக்கு கண்ணீராச்சு/

 ஆர் எஸ் கலா
தூவானம்
*************
சாரல் பட்டதுமே 
மரக்கிளை சிரிக்கிறது/
நீர்நிலை உயர்ந்ததுமே
நிலமெல்லாம் மணக்கிறது/
வறண்ட காற்றும் 
தென்றலாய் தடவுகின்றது /
வளர்ந்த வேளாண்மையும்
நிமிர்ந்து நிக்கின்றது/
வானம் அழுதாலே
வனமெல்லாம் மகிழ்கின்றது /
நிறுத்தாமல்
 இசையயெழுப்புகின்றதே
 கூரைவீட்டில்  தூவானம் /

ஆர் எஸ் கலா
கவல் நீதானே
*****************
துடிக்கும் இதயத்திற்கு
தூண்டில் இட்டவனே/
துள்ளும் பருவத்திலே
துணையாக வருபவனே/
தூண்டு கோலாக 
தூது விட்டவனே /
துளித்துளியாய் காதலை
துணிந்தே தெளித்தவனே/
தூவானமாய் மோகத்தை 
தூறலாக்கிப் பார்த்தவனே /
தூரிகை  வாழ்க்கைக்கு 
காவலன் நீதானே/

ஆர் எஸ் கலா