Thursday 26 December 2019

மாமனின் கடிதம் கண்டு



உள்ளக் குழியில் 
கொள்ளை ஆசைகளை/
பத்திரமாய் 
பதுக்கி வைச்சுகிட்டேன் /
ஒங்க கொள்ளிக் 
கண்ணு நொள்ளியதால்/
நடுயாமத்திலே ஏக்கத்தோடு 
சேதியாகச்  சொல்லிக்கிட்டேன் /

ஒன்னோட ஆண் மூர்க்கம் கண்ணு /
எனது தூக்கமும் இழந்துக்கிட்டேன்/
கொவ்வை மூக்கை வச்சு
குட்டிக் கவிதையும் கிறுக்கிக்கிட்டேன்/

மெல்லிய புன்னகையைத் 
திருடி கோடிட்டுக்கிட்டேன்/
உன் குறுநகையை 
வாரி கோலமிட்டுக்கிட்டேன் /
சொல்லிக்க சொல்லிக்க ஒம் 
பேரும் இனிக்கிறது என்னுக்கிட்டேன்/

சொல்லி முடிச்சிக்கிட்ட பின்னும் /
பதில் உரைச்சிக்காமல் 
இருக்கக் கண்ணுக்கிட்டேன்/
சாமந்திப் பூவ  சாமத்தில் 
வாட விட்டுக்கிட்டாய்/
அழகுப் பதுமையை அழவைத்து 
மௌனம் காத்துக்கிட்டாய்/
காத்தாடி போல் நெஞ்சைக் 
கூத்தாட விட்டுப்புட்டாய்/

இவ்வுலகம் வெறுத்து
மண்ணுலகம் போயிடவே
நினைச்சிக்க வச்சிக்கிட்டா/
தாரை தாரையாய் கண்ணீர் வடித்து /
தேரையாய் தேயும் வேளை /
தேடியே வந்ததையா மாமனே 
உம்மோட  கடதாசியும்/
கடதாசியப் படிச்சதுமே  
யென்னோட மூச்சும் குளிந்திடிச்சு/

இம்முட்டு ஆசையையும் 
எங்கிட்டு வைத்திருந்தாய் /
அன்னைக்கே சொல்லி இருந்தாக்க/
 இன்னைக்கு நானோ 
ஒம் பொண்டாட்டி மாமா/

No comments:

Post a Comment