கலாவின் தேடல்கள் (ஆர் எஸ் கலா)
Monday, 16 December 2024
Thursday, 21 November 2024
Friday, 27 September 2024
Friday, 20 September 2024
உனக்கென மட்டும்
வாழும் இதயமடா(டி).
::::::::::::::::::::::::::::::::::::::::::
உயிரென நினைத்தேன்
உள்ளத்தைக் கொடுத்தேன்/
உறவெனக் கண்டேன்
உதிரத்தில் இணைத்தேன்/
உறங்கிட இதயத்தையே
உறைவிடமாய் அளித்தேன்/
உணர்வுக்குள் விதைத்தேன்
உணர்ச்சியால் ரசித்தேன் /
உனக்கும் எனக்குமான
உதயமென மகிழ்ந்தேன்/
உல்லாசமாய் மலர்ந்தேன்
உதிரிப்பூவாய் இருந்தேன் /
உசுப்பேத்தியே கைப்பிடித்தாய்
உதறியே கதறடிக்காய்/
உச்சத்தில் துயரேற்றினாய்
உச்சரிப்பில் வலியேற்றினாய் /
உண்மையைக் கூறினால்
உணர்ந்திடுவாயோ என்னில் /
உனக்கென மட்டும் வாழும் இதயமடா(டி)/
உற்சாகமும் சோர்வும்
உன்னால் ஆனவையெடா/
உற்றுழியாய்க் கொல்லுவதை
உற்றுத்தான் பாருடா (டி)./
Thursday, 12 September 2024
மையலிலே தவிக்கிறேன்
*****************************
மையலிலே தவிக்கிறேன்
மையிட்டவளைத் தேடுகிறேன்/
பூங்குயிலே கேளாயோ
பூமகளே வாராயோ/
தேனருவியாய் விழுந்திடு/
தேன்மொழியில் பேசிவிடு/
காதோரம் கூறிடுவாயோ
காதலோடு கவிதைகளும்/
பார்த்து ஓயவில்லை
பாத்திடும் பணியும் தீரவில்லை/
சேகரித்தேன் கற்பனையை
சேதாரமாகிது அத்தனையும் /
நாளும் பொழுதும்
நானும் ஓடானேன்/
யாசகம் தேடிடவே
யாழினியே தயாரானேன்/
வேதனையில் நூலானேன்
துக்கத்தில் சருகானேன்/
பக்கத்தில் நீயிருந்தால்
கைகளுக்கு மலராவேன் /
மைனாவே வந்திடுவாயோ
இல்லை மறுத்திடுவாயோ?
மாமனோட முகங்காண
மைவிழியே தயக்கமேனோ/
Subscribe to:
Posts (Atom)